உணர்வுகளுக்காக ஒரு கவிதை..!!

1001


Kavithai

 



உணர்வுகளுக்காக ஒரு கவிதை – சொந்த
மண்ணை விடு சென்ற உறவுகளுக்காய் என்
” சமர்ப்பணம்”

அன்னையின் பிரசவத்தில் பிறந்தேன் – ஆனால்
உன் ஆசை முத்தங்களுடன் தவழ்ந்தேன் .
கட்டிழமைம்பருவத்தை அடைந்தேன் – மனதில்
கவலை ஏதுமின்றி சுற்றித் திரிந்தேன்…



ஆண்டுகள் இருபதில் ஆங்கில ஆசிரியரின் – அருமை
மனைவியானேன் அவரின் அன்புக்கும் அடிமையானேன்
அழகான செல்வமகளை கருவறையில் – சுமக்க
என் கணவரின் இதய அறையில் குடி புகுந்தோம்…



இத்தனை வருடங்களாகியும் கண்ணீர் துளியை – என்
கண்கள் இதுவரை உணரவில்லை
இன்று தான் என் கண்களில் ஈரம் – நனையும்
நாட்களின் ஆரம்பம் என்பதும் தெரியவில்லை…


ஈக்கள் மொய்க்கும் பூவின் இதழ்களில் – எல்லாம்
இறுதிச்சடங்குக்கு அவசரமாக தயாராக
நானும் வாழ்க்கையினை செல்வங்களை – இழக்க
என்னையறியாமல் தயாரானேன்…

உற்றார், உறவினரின் ஓலமிட்ட சத்தம் – கேட்டு
தாயே உருக்குலைந்து விட்டது ஊரின் நிசப்தம்
உயிர்கள் உடலை விட்டு பிரிய – பக்க வாத்தியங்களாக
பீரங்கி , துப்பாக்கி இசை முழங்க தொடங்கின…


ஊரை விட்டு கால்கள் நகர – சொந்த மண்ணே
உன் பிள்ளை உன்னை கை விட்டேன்.
உதிரத்தின் சொந்தங்களை காப்பாற்ற – உன்
நிழலிலிருந்து விலகி உணர்வற்ற யடமாகினேன்…

எல்லையில் இருந்த எல்லை வீரர்கள் – எமனான
இராணுவத்தினருக்கு காலை உணவாக
எதுவும் அறியாமல் சிதறி ஓடிய – நம்மவர்கள்
மதிய உணவிற்காக அழைக்கப்பட்டார்கள்…

ஏன் இந்த கொடுமை என்று – கேட்ட
எழுபது வயது தாத்தாவும்
பிறந்து தாய்பால் வாசம் மாறாத பிஞ்சின் உடலும்
பாதைகளில் பரிதாபமாக வழித்தடம் ஆனார்கள்..

ஐயிரு மாதம் தவமிருந்து பெற்ற ஆசை மகள்
அயோக்கியங்ககளின் ஆசைக்கு இரையாக
ஆசை மன்னவன் , ஆருயிர் கணவன் எங்கே?
ஐயோ என் எதிர் காலம் தொலைந்ததே…


ஒப்பாரி படத்தான் ஒரு வரி கூட – நினைவில்லையே
உணர்வுகளை பகிர உடலுண்டு உயிர் இல்லையே
ஒன்றாக வாழ்ந்த உறவுகள், தொடர்புகள்- இனியில்லையே
ஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லையே…

இவ்வளவு தானா என் வாழ்கை – முடியவில்லை
வளர்த்த மண்ணிற்கு என்னை பிரிய மனமில்லை
ஓராயிரம் கனவுகள் நெஞசைவிட்டு – அகலவில்லை
ஓடம் போக ஓடம் உண்டு நீரில்லை..

ஃ என்ற வடிவுடைய அடுப்பில் இட்லி அவிக்கவும் இடமுண்டு
மண்ணே உன் மடியில் படுத்துறங்கவும் இடமுண்டு
தாயின் ( மண்) உடலின் உள்ளே நம் வாழ்வின் – எச்சங்களை
சுமப்பதனால் தமிழனின் தாய் மண் ஈழம் என்ற பெருமை தமிழனுக்கு உண்டு.

-சுமித்ரா சதாசிவம் –