ஜொலிக்கும் இந்திய வீரர்கள் : இயன் சப்பல் புகழாரம்!!

496

Chappellஇந்திய அணியின் அசத்தலான இளம் வீரர்கள் எதிர்காலத்தில் ஜொலிப்பது உறுதி என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயன் சப்பல் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்திய அணியில் மூத்த வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓய்வு பெறத் தொடங்கினர். முதலில் கங்குலி, கும்ளே அடுத்து லட்சுமண், டிராவிட் வரிசையில் கடைசியாக சச்சின் விடைபெற்றார்.

இவர்களுக்கு மாற்று தேடுவது சிரமம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், புதியதாக வந்துள்ள இளம் வீரர்கள் நம்பிக்கை தருகின்றனர்.

இதுகுறித்து இயன் சப்பல் கூறுகையில், மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், இந்திய அணியில் எப்போதும் இல்லாத வகையில் திறமையான இளம் வீரர்கள் உருவாகி வருகின்றனர்.

ஷிகர் தவான், விராத் கோலி, புஜாரா, ரோகித் சர்மா மற்றும் உன்முக்த் சந்த் என இவர்கள் தான் எதிர்கால இந்திய வீரர்களாக ஜொலிக்க காத்திருக்கின்றனர்.

உலக கிண்ணத் தொடருக்கு இன்னும் 13 மாதங்கள் உள்ளன. இந்நிலையில் பெரும்பாலான அணிகள், அதிகமாக ஒருநாள் போட்டித் தொடர்களில் பங்கேற்க தொடங்கி விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.