உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னுடன் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவியுடன் பேஸ்புக்கில் நட்பு வைத்தமைக்காக ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்த சம்பவம் தொடர்பாக அதே பாடசாலையில் பயிலும் இரண்டு மாணவர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முசாபர்நகர் அருகே ஷியாம்லியில் உள்ள தனியார் பாடசாலையில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் மயாங் (17). கடந்த வெள்ளிக்கிழமை மாலை கோச்சிங் சென்டரில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவனுடன் படிக்கும் இரண்டு மாணவர்கள் அவனை வழிமறித்து தகராறு செய்தனர். பிறகு தங்களிடம் இருந்த கள்ளத் துப்பாக்கியால் மயாங்கை சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் வர்மா கூறுகையில்..
தங்களுடன் பயிலும் ஒரு மாணவியுடன் நட்பு கொள்ள வேண்டாம் என மயாங்கை இரண்டு மாணவர்கள் எச்சரித்துள்ளனர். இதை மீறி அந்த மாணவியுடன் பேஸ்புக் இணையதளத்தில் நட்பு வைத்திருந்ததால் மயாங்கை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்றார்.
இந்த சம்பவத்தில் சம்பந்தப் பட்ட 11ம் வகுப்பு பயிலும் மற்றொரு மாணவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.