வரலாற்று சாதனையை தொடர்ந்து தக்க வைத்துள்ள குமார் சங்ககார : அருகில் நெருங்க முடியாத கோஹ்லி!!

190


குமார் சங்ககார


சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா வசமே இன்னும் உள்ளது தெரியவந்துள்ளது.ஒருநாள், டெஸ்ட், டி20 கிரிக்கெட் என அனைத்தும் விதமான போட்டிகளிலும் சேர்த்து சங்ககாரா கடந்த 2014ல் மொத்தமாக 2868 ரன்கள் குவித்தார்.


இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை, 2019ஆம் ஆண்டு முடியவுள்ள நிலையில் யாரும் இந்த ரன்களை முறியடிக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.


இந்த பட்டியலில் ரிக்கி பாண்டிங் 2833 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் கடந்த 2005ஆம் இந்த ரன்களை எடுத்துள்ளார், விராட் கோஹ்லி கடந்த 2017ஆம் ஆண்டு 2818 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் நான்காவது இடமும் விராட் கோஹ்லி வசமே உள்ளது, அவர் கடந்த 2018ல் 2735 ரன்கள் குவித்ததன் மூலம் பட்டியலில் நான்காம் இடத்திலும் அவர் பெயரே உள்ளது.