வவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பே ரவலத்தின் 15வது ஆண்டை முன்னிட்டு அஞ்சலி!!

218


னாமி பே ரவலத்தின் 15வது ஆண்டு


இந்தோனேசியா தொடக்கம் இலங்கை வரை ஆட்டிப்படைத்த ஆழிப்பேரலை தந்த பேரவலத்தின் 15 ஆம் ஆண்டை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.வவுனியா, மாவட்ட செயலகத்தில் காலை 9.25 தொடக்கம் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி மற்றும் மௌன பிரார்ந்தனையும் இடம்பெற்றதுடன் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபாவின் அஞ்சலி உரையும் இடம்பெற்றது.


இதில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம். ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜ், அரச அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.