சூரிய கிரகணத்தின்போது குழந்தைகளை மண்ணில் பு தைத்த தாய்மார்கள் : க தறி அ ழும் வீடியோ!!

531

கர்நாடக மாநிலத்தில் சூரிய கிரகணத்தின்போது 10வயதிற்குட்பட்ட குழந்தைகள் க ழுத்து வரை மண்ணில் பு தைந்துள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டு பாதையில் சந்திக்கும் சூரிய கிரகணமானது இன்று இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தோன்றியது.

இன்று காலை 8 மணி முதல் 11.15 மணிவரை இந்த சூரிய கிரகணம் நீடித்தது. இந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது, வெளியில் செல்லக்கூடாது என அறிவியல் பூர்வகமாக நிரூபணம் செய்ய முடியாத பல்வேறு வ தந்திகள் உலா வந்தன.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் 10 வயதிற்குட்பட்ட சிறார்களை கழுத்து வரை மண்ணிற்குள் பு தைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

இதைச் செய்வதன் மூலம் அவர்கள் தோல் நோய்களைத் தவிர்க்கலாம் மற்றும் உடல் ரீதியாக சவாலாகிவிட மாட்டார்கள் என்று நம்புவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலானதை அடுத்து, மக்களிடையே விழிப்புணர்வு இல்லாதது குறித்து இணையதளவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.