
கட்டுக்காவலை தளர்த்தெறிந்துவிட்டாராம் ஊதா கலரு ரிப்பன். வாலிபர் சங்கத்தில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா தனது குழந்தை முகத்துடன் கூடிய நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விட்டார்.
அறிமுக படத்தில் கிடைத்த வெற்றியால் பல படங்களின் வாய்ப்புகளையும் பெற்று கோடம்பாக்கத்தில் நம்பர் வன் நடிகையாக வலம் வரும் இவர் படப்பிடிப்பு தளத்தில் மௌனதேவதையாம்.
யாருடனும் அதிகமாக பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு இருப்பவர் இனிமேல் அப்படி இருக்கக்கூடாது என்ற முடிவினை எடுத்துள்ளாராம்.
இந்த மௌனமானது வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதை புரிந்து கொண்ட அவர் படப்பிடிப்பு தளத்தில் ஹீரோக்களுடன் ஜாலியாக சிரித்து பேசி நேரத்தை செலவிடுகிறாராம்.





