மூன்று சிறுமிகளை வல்லுறவுக்குட்படுத்திய சிறுவனுக்கு பொலிஸார் வலைவீச்சு!!

540

Abuseசிலாபத்தில் 10 வயதுடைய மூன்று சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் ஒரே வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவிகளே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாடசாலை முடிந்து விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகளை அயலில் வசிக்கும் குறித்த சிறுவன் தொடர்ச்சியாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் தொடக்கம் இது இடம்பெறுவதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் கூறியுள்ளனர். தமக்கு நடந்தவற்றை ஒரு சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சிறுமிகள் மூவரும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.