இரத்தக் கறையும் கா யங்களும் இல்லை : பிரபல மொடல் ம ரணத்தில் விலகாத ம ர்மம்!!

403


பிரபல மொடல்



தொலைக்காட்சி தொகுப்பாளினியும் பிரபல மொடலுமான ஜாகி ஜான் ம ரணத்தில் வேறு நபர்களின் தொடர்பு உள்ளனவா என பொலிசார் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.



குடும்ப நண்பரும் பொதுமக்களும் அளித்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 23 ஆம் திகதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஹில் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஜாகி ஜானின் குடியிருப்புக்கு சென்ற பொலிசார்,




பூட்டிய கேட்டின் உள்ளே ஜாகியின் தாயார் எந்த சலனமும் இன்றி நின்றிருப்பதை கண்டுள்ளனர். அந்த குடியிருப்பின் முன் வாசலும், பின் வாசலும் திறந்த நிலையில் இருந்துள்ளது. குடியிருப்புக்குள் சென்ற பொலிசார், சமையலறையில் ம ரணமடைந்த நிலையில் கிடந்த ஜாகியின் ச டலத்தை மீட்டுள்ளனர்.


மேலும், சமையலுக்கு தயாராக காய்கறிகள் நறுக்கிய நிலையில் இருந்துள்ளது. சமையலறையில் ஜாகி தடுக்கி விழுந்ததில், தலையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயமே ம ரண கா ரணமாக இருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ர த்தக் க றையோ கா யங்களோ அவரது உ டலில் காணப்படவில்லை. 45 வயதான ஜாகி சமையலறையில் தடுக்கி விழுந்தாரா அல்லது இரண்டாவது நபர் அவரை தள்ளிவிட்டாரா என்பது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


மேலும், உடற்கூராய்வுக்கு பின்னரே ம ரண காரணம் என்ன என்பது உறுதி செய்ய முடியும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜாகியின் மொபைல் போனை கைப்பற்றியுள்ள பொலிசார், தற்போது அவரை தொடர்பு கொண்டவர்கள் மற்றும் இவர் தொடர்பு கொண்டவர்களின் தகவல்களை சேகரிக்க முடிவு செய்துள்ளனர்.

ஜாகியின் தாயார் முரணான தகவல்களை பொலிசாருக்கு அளித்துள்ளதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் மகனும் கணவரும் கொல்லப்பட்ட பின்னர் அவர் உ ளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

அதனாலையே ஜாகியின் ம ரணம் தொடர்பில் அவரால் தெளிவான தகவல்களை பொலிசாருக்கு தெரிவிக்க முடியாமல் போனது எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்து கொண்ட பின்னர் ஜாகி தாயாருடனே வசித்து வந்துள்ளார்.