வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!!

396

வவுனியா புளியங்குளத்தில்..

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

யாழிலிருந்து பதுளை நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து, புளியங்குளம் சந்திக்கு அண்மித்த பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் வீதிக்கு ஏற முற்பட்ட போது பேருந்து மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன் போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த 13 வயது சிறுவன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணை புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்தோடு பேருந்தினையும், சாரதியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.