லண்டன் மருத்துவமனையின் நடைமுறையை மாற்றிய தமிழ் குழந்தையின் ம ரணம்!!

262

லண்டனில் உள்ளபிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் ஒரு குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்த போது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உ யிரிழந்துள்ளது.

மூன்று மாத ஆண்டு குழந்தையான அக்சரன் சிவரூபன் என்ற குழந்தையே சம்பவத்தில் உ யிரிழந்துள்ளது.

லண்டன் லெம்பேத்தில் உள்ள எவெலினா வைத்தியசாலையில், அவசரமற்ற சத்திர சிகிச்சையின் போது, என்டோட்ரோகியல் குழாய் தவறாக மாற்றி வைக்கப்பட்டதால், மாரடைப்பு ஏற்பட்டு குழந்தை உ யிரிழந்துள்ளது.

மூச்சு குழாய் அல்லது காற்றோட்டம் தொடர்பான குழாயை எவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்று ஐரோப்பா முழுவதும் விசேட மருத்துவ நிபுணர்களுக்கு வழக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வயிற்று உணவை கொண்டு செல்லும் குழாயில் வைத்தமையே தற்போதைய பிரச்சினைக்கு காரணமாகியுள்ளது.

அதேவேளை டிசம்பர் 12 ஆம் திகதி நடந்த அக்சரனின் ம ரணமானது தேவையான மருத்துவ சிகிச்சையின் போது எதிர்பாராத வி ளைவுகளால் ஏற்பட்டது என சவுத்வேர்க் கோனரின் திடீர் ம ரண விசாரணை அதிகாரி அன்ட்ரூ ஹெரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய வழிக்காட்டுதல்கள் மூலம் இப்படியான துன்ப சம்பவங்களை தடுக்கும் என Suttonஇல் உள்ள அக்சரனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தன்னார்வ நிதியம் ஒன்றின் உதவியுடன் அக்சரனுக்கு எவெலினா வைத்தியசாலையின் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

கிஸ்ங்கடன் வைத்தியசாலையில் பிறந்த அக்சரனுக்கு இருதயத்தில் இரண்டு சிறி ஓட்டைகள் இருந்துள்ளன.

அக்சரன் சாதாரண மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, சாதாரண சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அன்றைய தினமே வீட்டுக்கு செல்ல முடியும் என பெற்றோரிடம் கூறப்பட்டுள்ளது.

இருதயத்தில் உள்ள தடுப்பு காரணமாக குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சத்திர சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் அணி தவறாக கருதியுள்ளது.

பி ரேதப் ப ரிசோதனைகளின் பின்னர் ஒக்சிஜன் குழாய் தவறான இடத்தில் வைக்கப்பட்டதால் மரணம் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சை ஆரம்பித்து சிறிது நேரத்தில் தமது மகன் இ றந்து போனதாகவும் உலகமே உடைந்து விழுந்தது போல் ஆனதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

புதிய வழிக்காட்டுதல்கள் மூலம் அக்சரனின் பெயரால் எதிர்காலத்தில் குழந்தைகள் இ றப்பதை தடுக்க முடியும் எனவும் இது தமக்கு ஆறுதலையும் பெருமையை தந்துள்ளது எனவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் மிக விரைவில் பாடத்தை கற்றுக்கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக முழுமையான விசாரணைகளை நடத்தியுள்ளதாகவும்,

அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்கியுள்ளதாகவும் மருத்துவ வழிக்காட்டுதலை மாற்றி, அறிவுறுத்துவதற்காக தேசிய வழிக்காட்டுதலில் திருத்தங்களை செய்துள்ளதாகவும் தன்னார்வ அமைப்பான Guy’s and St Thomas’ NHS Foundation Trust தெரிவித்துள்ளது.