மாடு கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து!!

267

மோட்டார் சைக்கிள் விபத்து

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின், உயிலங்குளம் பகுதியில் மாடு கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி மோட்டார் சைக்கிளொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த நபர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதி ஓரத்தில் கட்டப்பட்டிருந்த மாடு கயிற்றுடன் வீதிக்கு வந்துள்ளது. இந்த நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.