வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு சாணி, செருப்பினாலும் விளக்குமாறாலும் அடித்து போ ராட்டம்!!

344

டக்ளஸ் தேவானந்தாவிற்கு..

வவுனியாவில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30.12.2019) காலை 11 மணியளவில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் 1045வது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போ ராட்ட கொட்டகை முன்பாக குறித்த ஆ ர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியாவில் நாளையதினம் கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் (28.12.2019) ஊடக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில்,

அவரின் சந்திப்புக்கு எ திர்ப்பு தெரிவித்து கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போ ராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களை க டத்திய டக்ளசே , எங்கே எங்கே உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் ,

கையில் ஒப்படைத்த – க டத்தி செல்லப்பட்ட உறவுகள் எங்கே, ஊடக ப டுகொ லை நிகழ்த்தியவர் இந்த டக்ளஸ் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளுடனும் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போ ராட்டத்தின் இறுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் படத்திற்கு சாணி வீசியதுடன் விளக்குமாறு, தும்புத்தடியினால் அடித்து, காரி உமிழ்ந்து தமது எ திர்ப்பினை வெளிக்காட்டிருந்தனர்.