பிரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியையான 30 வயது சாரா ப்ரூக்சுக்கு தென் ஆபிரிக்காவை சேர்ந்த ஜோன்ஸ் டி கிளார்க்குடன் திருமணம் நிச்சயமானது.
திருமணம் நிச்சயமானவுடன் தனது வருங்கால கணவருடன் தென் ஆபிரிக்காவின் மிகப்பெரிய விளையாட்டு பூங்காவை காரில் சுற்றிப்பார்த்தபோது, மதம் பிடித்த யானை ஒன்று அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலினால் அவர்கள் காயமடைந்துள்ளனர். இது குறித்து பேசிய அப்பூங்காவின் பொது மேலாளர் வில்லியம் மபாசா தகவல் தருகையில்..
ஆண் யானையான அதற்கு மதம் பிடித்தவுடன் அதன் சுய பலத்தை போல் 60 மடங்கு அசுர பலம் ஏற்பட்டதால் சாராவின் காரை அடித்து துவம்சம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
காயமடைந்த சாராவிற்கு பொம்பேலாவிலுள்ள மெடி-கிளினிக் மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதன் பின் அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரது காயங்கள் ஆற இன்னும் 3 வார காலம் ஆகுமென்றும், அதுவரை இருவரும் அந்நாட்டிலேயே தங்க நேரிட்டுள்ளது என்றும் தெரிகிறது.
சாராவை தாக்கிய யானை ஏற்கனவே பலமுறை மதம் பிடித்ததால், பல காளைகளை அடித்து கொன்றுள்ளதாகவும், இந்த சம்பவத்திற்கு பின் அது கொன்றழிக்கப்பட்டு விட்டதாகவும் மபாசா தெரிவித்தார்.