சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணிகள் செய்த மோசமான வேலை!!

322

இலங்கை பயணிகள்..

சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோ தனையில் சுமார் 1 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இலங்கையை சேர்ந்த சிங்களர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று தாய்லாந்தில் இருந்து புறப்பட்டு, நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 1.15 மணிக்கு தமிழகத்தின் சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.

அதில், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு, சென்னை திரும்பிய சிவகங்கையை சேர்ந்த முகமது அசாருதீன் என்பவரை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, அவர் தன்னுடைய உள்ளாடையில் தங்க கட்டிகளை க டத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து துபாயிலிருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் விருதுநகரை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (42), ராமநாதபுரத்தை சேர்ந்த ஜமாலுதீன் (35) ஆகியோரிடம் இருந்தும் அதிகாரிகள் தங்ககட்டிகளை பறிமுதல் செய்தனர்.

அதன் பின் நேற்று அதிகாலை 3 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இலங்கையை சேர்ந்த ரணசிங்கே டான் (27), மனதுங்க சுனிமால் (28) ஆகியோர் ஆசனவாயில் மறைத்து வைந்திருந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனால் சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் சுமார் 1.12 கோடிரூபாய் மதிப்புடைய 2 கிலோ 900 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிங்கள பயணிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.