ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசல் பரீட்சை வழமைபோன்றே நடத்தப்படும் : பரீட்சைகள் திணைக்களம்!!

432

Grade 5அண்மைக்காலமாக பாரிய சர்ச்சைகளை எதிர் நோக்கிய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் எந்தவிதமான மாற்றங்களும் இன்றி வழமை போன்றே இந்த ஆண்டும் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய வருடங்களில் வழமையாக வழங்கப்பட்டு வந்த 2 வினாத்தாள்களே இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள பரீட்சையின் போதும் வழங்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை சரளமான முறையில் நடத்துவது தொடர்பில் தற்போது கல்வி ஆணைக்குழு, கல்வியமைச்சு, பரீட்சைகள் திணைக்களம் தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய பரீட்சை முறையில் உள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பெற்றோர் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு பரீட்சைகள் சரளமாக்கப்படவுள்ளன.



கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.