இலங்கையில் வீசா காலம் முடிவடைந்த போதும் சுமார் 4 மாதங்கள் தங்கியிருந்த ஐந்து இந்திய நடன மாதுகள் நாடு கடத்தப்பட்டனர்.
இவர்களின் கடவுச்சீட்டுக்கள் தடைசெய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டதாக குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நடன மாதுக்கள் 18க்கும் 25 வயதுக்கும் உட்பட்டவர்களாவர்.
பொரளையில் உள்ள இரவு கேளிக்கை இடம் ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாதம் ஒன்றுக்கு 65 ஆயிரம் ரூபாவை இலங்கையில் வருமானமாக பெற்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.