இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் படு உற்சாகத்தில் இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 2010ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார்.
அப்போது அவரால் அணியில் நிரந்தரமான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இதன் பின் கடந்த 2013ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் வாய்ப்பு பெற்றார்.
அறிமுக போட்டியில் அதிவேக சதம் அடித்து அசத்திய இவர், தொடர்ந்து இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி., சம்பியன்ஸ் கிண்ண தொடரில் தொடர் நாயகன் விருது வென்றார்.
தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். நேற்று மும்பையில் உள்ள தனியார் மருத்துமனையில் இவரது மனைவி ஆயிஷா முகர்ஜிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
2012ல் ஷிகர் தவானை இரண்டாவதாக மணந்த ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தின் மூலம் ரியா, ஆலியா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





