சென்னை சிறுவனின் கண்டுபிடிப்பை கௌரவித்த அமெரிக்கா!!

651

Arjunசென்னை சிறுவனின் பயன்பாட்டு கண்டுபிடிப்பிற்கு அமெரிக்க பல்கழைக்கழகம் முதல் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த அர்ஜுன்(13) என்ற சிறுவன் வேலம்மாள் வித்யாசிரமம் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.

சிறுவயதில் இருந்தே பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் தினமும் இணையதளத்தில் 3 மணி நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தச் சிறுவன் பொழுதுபோக்கு அம்சங்களான விளையாட்டில் கவனம் செலுத்தாமல் மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறந்த பயன்பாடுகளை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்தி வந்துள்ளான்.

இவனது இந்த ஆர்வமே பேருந்து இருப்பிடம் அறியும் பயன்பாட்டினை கண்டுபிடிப்பதற்கு தூண்டுதலாக இருந்துள்ளது.



தற்போழுது அவனின் கண்டுபிடிப்பிற்கு அமெரிக்காவின் மசாச்சுஸெட்ஸ் தொழிற்கல்வி நிறுவனம் 2012 மற்றும் 2013ம் ஆண்டிற்கான சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கான முதல் பரிசை வழங்கி சிறப்பித்துள்ளது.

2012ம் ஆண்டிற்கான பரிசாக கூகுள் நெக்சஸ் லப்டப் 2013ம் ஆண்டிற்கான பரிசாக நெக்சஸ் 5 ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன் மற்றும் சான்றிதழும் அந்நிறுவனத்தின் சார்பில் அச்சிறுவனுக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து அச்சிறுவனின் தந்தை சந்தோஷ்குமார் கூறுகையில் அர்ஜீன் இரண்டரை வயதிலேயே கணனி இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும் அவனாகவே மென்பொருள் பற்றிய விவரங்களை யூ டியூப் இணையதளம் மூலம் அறிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அர்ஜீன் “ஐ-சேப்” எனும் ஒருவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை ஒரே பொத்தானை அழுத்தி தெரிவிக்கும் வகையில்(குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக) புதிய பயன்பாட்டை கண்டுபிடிக்க முயற்சி செய்துவருவதாக கூறப்படுகிறது.