பெப்ரவரி முதல் இரு மொழிகளில் தேசிய அடையாள அட்டை!!

681

IDஇலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் வழங்கும் சகல தேசிய அடையாள அட்டைகளிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டைகளை கணனிமயப்படுத்தும் திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திணைக்களம் கூறியுள்ளது.

அதேபோல் 2016 ஆம் முதல் வழங்கப்பட உள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.