வீதியை விட்டு விலகிய சொகுசு வேன் விபத்து : சாரதி மாயம்!!

591

சொகுசு வேன் விபத்து

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் வூட்லண்டபசார் பகுதியில் இன்று (03.01.2020) வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணியளவில் சொகுசு வேன் ஒன்று வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வேனினை செலுத்திய சாரதி த லைமறைவாகியிருப்பதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வேன் பள்ளத்தில் பாய்ந்த உடன் சாரதி இறங்கி வேனினை தாழ்பால் இட்டு வீதியில் ஹட்டன் பக்கமாக நடந்து சென்றதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை எந்த வித தகவலும் வழங்காமையினால் பொலிஸார் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன.

வேன் சாரதி போ தையில் வாகனம் செலுத்தினாரா?,அல்லது சட்ட வி ரோத பொருட்கள் ஏதும் குறித்த வேனில் உள்ளனவா? அல்லது வேறு ஏதும் காரணங்களினால் த லைமறைவாகினாரா? போன்று பல்வேறு சந்தேகங்களை ஏற்பட்டுத்தியுள்ளன.

இந்த வேன் விபத்து இடம்பெற்றது, தொடர்பாகவும் சாரதி தொடர்பாகவும் வேனில் காணப்படும் வாகன அனுமதிப்பத்திரத்தனையும், பொது மக்களின் தகவல்களின் அடிப்படையிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த வேன் மேலும் பற்றைகளில் சிக்கியிருப்பதனால் பள்ளத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சாரதியில்லாததனால் அதனை தடுப்பது சிக்கலாக காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.