விளையாட்டாக சகோதரனை சுட்டுக்கொன்ற சிறுமி!!

613

Pistolஅமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெட்ராய்ட் நகரில் உள்ள உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுவன் சம வயதுள்ள தனது சித்தப்பா மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

விரட்டிக் கொண்டே வந்த சிறுமியின் பார்வையில் படுக்கையறையில் உள்ள கட்டிலின் அருகே ஒளித்து வைக்கபட்டிருந்த துப்பாக்கி சிக்கியது.

அதனை கையில் எடுத்த சிறுமி விளையாட்டாக சிறுவனை மிரட்டும் நோக்கத்தில் அவனை நோக்கி குறிவைத்தபடி, ´ஹேண்ட்ஸ் அப்´ என கூறினாள்.



விளையாட்டாக சிறுமி துப்பாக்கியை அழுத்த அதிலிருந்து வெளியேறிய தோட்டா சிறுவனை தாக்க அவன் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.