புங்குடுதீவு..

புங்குடுதீவு 11ஆம் வட்டார பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து அ ழுகிய நிலையில் ஆண் சி சுவின் ச டலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சிசுவின் ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்து 2 நாட்கள் இருக்கும் என கூறும் பொலிஸார், மீட்கப்பட்ட சடலத்தில் தொப்புள் கொடியும் காணப்படுவதாக உறுதிப்படுத்தியுள்ளனர். கொ லை செய்யப்பட்டு யூரியா பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் ச டலம் கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புங்குடுதீவு 11ஆம் வட்டார பகுதிக்கு பொறுப்பான மருத்துவ மாது மற்றும் பொது சுகாதார சுகாதார பரிசோதகர்கள் உதவியுடன் புலன் வி சாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் ச டலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பி ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




