அனைவரின் கவனத்தை ஈர்த்த திருநங்கையின் வராலாற்று சாதனை!!

494

வராலாற்று சாதனை

தமிழக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது அதிமுகவிற்கு பெருத்த பின்னடைவை கொடுத்தாலும், அடுத்த தேர்தலில் எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து அதிமுக தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், இரு தினங்களாக வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், அனைவரின் கவனத்தை ஈர்த்த சில வெற்றியாளர்களை பார்க்கலாம்.

திருநங்கை ரியா : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் 2வது வார்டு கவுன்சிலராக திமுக வேட்பாளர் ரியா தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில், முதல் திருநங்கை கவுன்சிலர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

இவரது வெற்றி தமிழக அரசில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அனைவராலும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவரை திமுக தலைவர்கள் பலர் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்கள் பகிர்ந்துள்ளனர்.

துப்புரவு பணியாளர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கான்சாபுரம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருந்த சரஸ்வதி என்பவர், பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றுள்ளார். அவர், தற்போது தான் துப்புரவு பணியாளராக இருந்த ஊராட்சிக்கு தலைவராகியுள்ளார்.

கடந்த முறையே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தபோது ஊராட்சி தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்ததால் அரசு பணியை இழந்தார். தற்போது தற்காலிக பணியாளராக துப்புரவு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

79 வயது மூதாட்டி : மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரிட்டாபட்டி கிராம ஊராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயதாகும் மூதாட்டி வீரம்மாள் அழகப்பன் வெற்றி பெற்றுள்ளார். வீரம்மாள் ஏற்கனவே இரண்டு முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர்.

கல்லூரி மாணவி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றுள்ளார்.

இதே கிராம ஊராட்சிக்கு இவரது தந்தை தலைவராக இருந்துள்ளார். தற்போது அந்த தொகுதி பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால், மகள் அந்த தொகுதியில் களம்கண்டுள்ளார்.

73 வயது மூதாட்டி தங்கவேலு : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ. தரைக்குடி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட 73வயதாகும் தங்கவேலு என்ற மூதாட்டி 60 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சேவை செய்யப் போவதாக அவர் கூறுகிறார்.