யாழ்ப்பாணம் கரவெட்டிப் பகுதியில் சேஷ்டை செய்ய முற்பட்டபோது, தடுத்த பெண்ணொருவரின் நெஞ்சுப் பகுதியை வெட்டிய நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கரவெட்டி தெற்கைச் சேர்ந்த இந்திரன் நிமல்சன் (33) என்பவரே நேற்று கைது செய்யப்பட்டதாக நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமரட்ண மாவட்டகே தெரிவித்தார்.
கடந்த 14ம் திகதி புற்களை வெட்டிக் கொண்டிருந்த குறித்த பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் சேஷ்டை செய்ய முற்பட்ட குறித்த சந்தேக நரை அப்பெண் அடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பெண்ணின் கையிலிருந்த கத்தியைப் பறித்து நெஞ்சுப் பகுதியை வெட்டிவிட்டு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும், குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.