அவனுக்குள் இருந்து..

அமெரிக்காவில் மைக்ரோ ஓவனுக்குள் பாம்பு இருந்த சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவில் வசித்து வரும் அம்பர் ஹெல்மின் வீட்டிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின் போது ஹெல்மின் கணவர் ராபர்ட், பீட்சாவை சூடாக்க மைக்ரோ ஓவனை ஆன் செய்துள்ளார். ஓவன் சூடான பிறகு பீட்சாவை உள்ளே வைக்க சென்றுள்ளார். எனினும், காலியான ஓவனிலிருந்து புகை வருவதை கண்ட அம்பர் ஹெல்ம், ஓவனுக்குள் சரிபார்த்துள்ளார்.

அப்போது, அதற்குள் பாம்பு ஒன்று கருகி இறந்து கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சிடைந்த ஹெல்ம் தனது 3 மற்றும் 1 வயதுடைய குழந்தைகளுடன் பா துகாப்பாக வெளியே சென்றுள்ளார்.

பாம்பை அப்புறப்படுத்திய ராபர்ட், வீட்டை முழுமையாக சோதனை செய்துள்ளார். அவர்கள் கடைசியாக ஓவனை கிறிதுமஸ் அன்று பயன்படுத்தியுள்ளனர்.

ஓவனுக்கு அடியில் இருக்கும் ஓட்டை வழியாக பாம்பு உள்ளே நுழைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், வீட்டிற்குள் பாம்பு எப்படி வந்தது என்பது கேள்விகுறியாகவே உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து வீட்டில் பாம்பு இல்லாததை உறுதிப்படுத்த உள்ளுர் நிறுவனம் அடுத்த வாரம் ஹெல்ம் வீட்டிற்கு வருகிறது.




