கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை!!

406

MURDERகிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் யூன் மாதம் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற கிளிநொச்சி பளையை சொந்த இடமாகவும், கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவபெருமான் கேதீஸ்வரன் (35) என்பவரே 16.01.2014 அன்று அவுஸ்ரேலியாவில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேதீஸ்வரன் குறித்த தினத்தன்று தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் சிலர் இளைஞர்கள் வீட்டின் கதவினை தட்டியுள்ளனர். இதன்போது வீட்டு உரிமையாளர்கள் கதவினைத் திறந்து போது உள் நுழைந்த இளைஞர்கள் கேதீஸ்வரன் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இறந்தவரின் உடலினை கிளிநொச்சியில் உள்ள அவரின் வதிவிடமான ஊற்றுப்புல கிராமத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.



கொலை செய்யப்பட்ட கேதீஸ்வரன் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். மனைவியும் சிறு குழந்தைகளும் ஊற்றுப்புலத்தில் வசித்து வருகின்றனர்.