மட்டக்களப்பு சிறைக் கைதிகள் கூரை மேல் ஏறிப் போ ராட்டம் : குவிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர்!!

449

சிறைக் கைதிகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் கூரை மேல் ஏறிப் போ ராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12இற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இந்த போ ராட்டத்தினை இன்று முற்பகல் ஆரம்பித்துள்ளனர்.

சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை உ யிரிழந்ததை தொடர்ந்து, குறித்த கைதியின் ம ரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியே இந்த போ ராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

காய்ச்சலினால் சிறைச்சாலையில் சிகிச்சைபெற்று வந்த கைதியொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உ யிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், குறித்த சிறைக்கைதியின் ம ரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைக்கைதிகள் நீதிபதி நேரடியாக சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த சிறைக்கைதிகளின் போ ராட்டத்தினை தொடர்ந்து சிறைச்சாலையின் பா துகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், படையினரும் பா துகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி சிறைச்சாலைக்கு வராவிட்டால் தாங்கள் கழுத்தினை அறுத்து த ற்கொ லை செய்யப்போவதாகவும் கூரையில் இருந்து குதிக்கப்போவதாகவும் கைதிகள் அ ச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

குறித்த சிறைக் கைதிகளின்போ ராட்டம் காரணமாக மட்டக்களப்பு சிறைச்சாலைப்பகுதியில் ப தற்றத்துடன் கூடிய நிலைமை நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

-தமிழ்வின்-