வட்ஸ் அப்பினை தெறிக்கவிட்ட பயனர்கள்: புதிய சாதனை!!

7


வட்ஸ் அப்


பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் ஆனது புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பின்போது உலகளவில் உள்ள பயனர்கள் வாட்ஸ் ஆப்பின் ஊடாக வாழ்த்துக்களை பரிமாறினர்.புத்தாண்டு பிறப்பின் நள்ளிரவிலிருந்து அடுத்த 24 மணி நேரத்தில் உலகளவில் சுமார் 100 பில்லியன் குறுஞ்செய்திகள் வாட்ஸ் ஆப்பினூடாக பரிமாறப்பட்டுள்ளன. இவற்றில் Text Messaging, Status, Picture Messageing, Calling, Voice Notes என்பனவும் அடங்கும்.


இதேவேளை புத்தாண்டு தொடர்பாக சுமார் 12 பில்லியன் படங்களும் பரிமாறப்பட்டுள்ளன. இதேவேளை இந்தியாவில் மாத்திரம் 20 பில்லியன் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.