முறிகண்டியில் விபத்து : 20 வயது இளைஞன் ஸ்தலத்திலேயே பலி!!

463

முறிகண்டியில் விபத்து..

முல்லைதீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிகண்டியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே ப லியாகியுள்ளார்.

ஏ9 வீதியில் வேகமாக பயணித்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்து சம்பவம் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் நேற்று (05.01.2020) இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சாந்தபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என்ற இளைஞரே உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.