மட்டக்களப்பில் கா ணாமல்போன நபர் சடலமாக மீட்பு!!

542

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு, கல்லடி – திருச்செந்தூரில் கா ணாமல்போன நபர் நேற்று மாலை கல்லடி கடற்கரை பகுதியிலிருந்து ச டலமாக மீட்கப்பட்டுள்ளார். திருச்செந்தூர் 6ஆம் குறுக்கினை சேர்ந்த ஜுலியன் யூட் (32 வயது) என்பவர் வீட்டிலிருந்து சென்ற நிலையில் கா ணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து அவரை தேடிவந்த உறவினர்கள் நேற்று முன்தினம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையிலேயே நேற்று மாலை அவரின் கல்லடி, திருச்செந்தூர் சுனாமி நினைவு தூபிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில் ஜுலியன் யூட்டின் ம ரணம் தொடர்பில் அவரின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.