மாட்டு சாணத்தால்..

மகள் திருமண காரை அவருடைய தந்தை மாட்டு சாணத்தால் அலங்கரித்துள்ள சம்பவம் உறவினர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நவ்நாத் டுதா என்கிற மருத்துவர், தன்னுடைய மகளின் திருமண காரை மாட்டு சாணத்தால் அலங்கரித்துள்ளார். அங்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் இதனை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர், மாட்டு சாணத்தின் பயன்பாட்டை பிரபலப்படுத்துவதற்காகவே அப்படி செய்ததாக கூறியுள்ளார். மாட்டு சாணத்தால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என கூறிய அவர், மனித உடலில் உள்ள நோ ய்களை அகற்றும் திறன் மாட்டு சாணத்திற்கு உள்ளது என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

உலக வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டே வருவதால், சுற்றுசூழலை பா துகாப்பதில் பசுக்கள் முக்கிய பங்கினை வகிப்பதாகவும் கூறியுள்ளார்.

அதோடு அல்லாமல், மாட்டு சாணத்தின் மூலம் காரை அலங்கரிப்பதால் கேபினின் டெம்ப்ரேச்சர் குறையும், செல்போன் கதிர்வீச்சுகளில் இருந்து காப்பாற்றும் எனவும் கூறியுள்ளார்.





