அஜித் இரசிகர்களுடன் மோத வேண்டாம் : விஜய் அறிவுரை!!

238

Vijay

அஜித் இரசிகர்களுடன் மோதல் வேண்டாம் என இரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை கூறியுள்ளார். நடிகர் விஜய் ட்விட்டர் தளம் மூலம் இரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், விஜய் அளித்த பதில்களும்…

கேள்வி : ஜில்லா படம் வெற்றி பெற்றது பற்றி?

பதில் : ஜில்லா´ படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணமாக இருந்த எனது இரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி : தமிழ் படஉலகில் உடம்பை வருத்தி கடுமையாக உழைக்கும் நடிகர் யார்?

பதில் : சீயான் விக்ரம்.

கேள்வி : உங்கள் இரசிகர்களுக்கும், அஜித் இரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறதே?

பதில் : தயவுசெய்து இதுபோன்ற தகராறுகளில் இரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற மோதல்கள் ஆரோக்கியமானது அல்ல.

கேள்வி : இரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில் : உங்கள் வேலையை நன்றாக செய்யுங்கள். உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் செய்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

கேள்வி : மோகன்லாலுடன் நடித்தது பற்றி?

பதில் : மோகன்லாலுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. மலையாள படமொன்றில் அவருடன் இணைந்து நடிக்க ஆசை.

கேள்வி : ஹிந்தி படத்தில் நடிப்பீர்களா?

பதில் : நமக்கு எப்பவும் நம்ம தமிழ்நாடுதான்னா…

கேள்வி : உங்களை எதிர்க்கும் இரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகீறீர்கள்?

பதில் : அவர்களையும் நான் விரும்புகிறேன்.