திரைக்கு வரும் நடிகர் உதய்கிரணின் வாழ்க்கை!!

433

uday

நடிகர் உதய்கிரணின் தற்கொலை சம்பவம் சினிமா படமாகிறது. உதய்கிரண் தமிழில் வம்பு சண்டை, பொய், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருந்தார். கடந்த 5ம் திகதி வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது தெலுங்கு, தமிழ் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உதய் கிரணுக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. வீட்டுக்கு வாடகை கொடுக்கவே சிரமப்பட்டார். தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் அவருடன் பேசுவதையும் தவிர்த்தார். இது அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் இதனால் தற்கொலை செய்து கொண்ட தாகவும் கூறப்பட்டது.

உதய் கிரண் வாழ்க்கையில் நடந்தவற்றை தொகுத்து சினிமா படமாக எடுக்கின்றனர். இதில் அவரது சினிமா வாழ்க்கை, குடும்ப பிரச்சினைகள் காட்சி படுத்தப்படுகிறது. சிரஞ்சீவி மகளுக்கும், உதய்கிரணுக்கும் முதலில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பிறகு அது இரத்தானது.

விஷிதா என்பவரை உதய் கிரண் மணந்தார். தற்கொலைக்கு சிரஞ்சீவி குடும்பத்தினரும் காரணம் என இரசிகர்கள் விமர்சித்தனர். இதுவும் படத்தில் சேர்க்கப்படுகிறது.