மன்னாரில் கணவன், மனைவியை கட்டிவைத்து விட்டு கொ ள்ளையடித்த திருடர்கள்!!

554

மன்னாரில்..

மன்னார், எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் கொ ள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த சுமார் 8 பேர்களைக் கொண்ட தி ருடர் குழுவினர் இந்த கொ ள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்தவர்களின் வாய்கள் க ட்டப்பட்டுள்ள நிலையில், சுமார் 25 பவுண் தங்க நகைகள் உள்ளடங்கலாக 50 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை அவர்கள் கொ ள்ளையடித்துள்ளனர்.

பின்னர் கணவன் மற்றும் மனைவி என இருவரும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடினை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இச் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.