விமான நிலையத்தில் சிக்கிய நபர் : சோ தனை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

749

விமான நிலையத்தில்..

ஐக்கிய அமீரகத்தில் வயிற்றுக்குள் வைரக் கற்களை மறைத்து வைத்து க டத்த முயன்ற வெளிநாட்டவரை சுங்க அதிகாரிகள் சாமர்த்தியமாக கைது செய்துள்ளனர்.

ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மாகாணத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆபிரிக்க நாட்டவரான பயணி ஒருவர்  ச ந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் விமான நிலையத்தில் சி க்கியுள்ளார்.

அவரை வி சாரணைக்கு உட்படுத்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் இறுகியுள்ளது. உடனடியாக ஷார்ஜா விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஸ்கானரில் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதில் அவரது வயிற்றுக்குள்ள் 3 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்களின் உதவியுடன், அந்த நபரின் வயிற்றில் இருந்து 3 பொட்டலங்களை வெளியே எடுத்த அதிகாரிகள் அ திர்ச்சியடைந்தனர்.

அந்த பொட்டலங்களில் சுமார் 90,000 டொலர் மதிப்பிலான 297 கிராம் வைர கற்களை அவர் மறைத்து எடுத்து வந்தது அம்பலமானது. மட்டுமின்றி ஐக்கிய அமீரகத்திற்கு இதற்கு முன்னர் பலமுறை வந்து சென்றதாகவும், ஆனால் க டத்தலில் ஈடுபடுவது இதுவே முதல் முறை எனவும் அவர் வி சாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி தாம் எடுத்துவந்த வைர கற்கள், விலை அதிகமாக தரும் வாடிக்கையாளருக்கு விற்கவும் முடிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார்.