
நயன்தாரா என்றாலே சர்ச்சைதான் என்கிற அளவுக்கு நாளுக்கு நாள் எதாவது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார். நடிகர் சிம்புவுடன் கொஞ்ச காலம் காதலில் இணைந்திருந்தவர் பின் என்ன காரணத்தாலோ அவரை விட்டு பிரிந்தார்.
படங்கள் எதுவும் ஒத்துக் கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். அதன் பின் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்று, பின் நின்று போனது. அப்போதும் அப்செட்டான நயன் திரைப்படங்களில் நடிக்காமல் விலகியிருந்தார்.
தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி நிறைய படங்களுக்கு ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதுவும், இயக்குனர் பாண்டிராஜ் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பத்தில் மறுத்தவர் பிறகு சம்மதித்தார்.
அதே போல தற்போது பிரபுதேவா இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளார்.





