பிரான்ஸ் ஜனாதிபதியின் கள்ளக் காதலால் மனைவி தற்கொலை முயற்சி!!

598

France

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி வலேரி டிரைர்வைலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 59 வயதான பிரான்ஸ் ஜனாதிபதி ஹாலண்டே, 41 வயதான ஜூலி காயட் என்ற நடிகையுடன் தொடர்பு வைத்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதனால் ஜனாதிபதியின் மனைவி வலேரி டிரைர்வைலர் அதிகமான மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகையுடன் ஏற்பட்ட தொடர்பால் அதிபர் ஹாலண்டே, 48 வயதான தனது மனைவிக்கு பிரிவு ஒப்பந்தத்தை அனுப்பினார். அதற்குள் வலேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த திட்டம் முறியடிக்கப்பட்டது.

நடிகை ஜூலி காய்ட்டுடன் தான் ஜனாதிபதியாவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாக தொடர்பு ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ள ஹாலண்டே மேலும் அது பற்றி கருத்து கூற மறுத்துவிட்டார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள மனைவியைக் காண பிரான்ஸ் ஜனாதிபதி இதுவரை செல்லவில்லை. எனினும், பூங்கொத்துக்களை அனுப்பினார்.