வவுனியா பண்டாரிக்குளம் வீதிகளுக்கு ஒளியூட்டிய பொதுஜன பெரமுன!!

760

வீதிகளுக்கு ஒளியூட்டிய..

வவுனியா பண்டாரிக்குளம் வீதிகளுக்கு நகரசபையினரினால் நேற்று (09.01.2020) மின்விளக்குகள் பொருத்தப்பட்டது.

பண்டாரிக்குளத்தின் பல பகுதிகளில் உள்ள வீதிகள் இரவு நேரங்களில் மின் குமிழ்களின்றி இருட்டாக காட்சியளித்தது.

இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் தர்மபால செனவிரத்தினவிடம் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வவுனியா நகரசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறித்த பகுதிகளுக்கு மின்குமிழ்கள் பொருத்தப்பட்டது.

அந்த வகையில் பண்டாரிக்குளம் பாடசாலை வீதி , அம்மன் கோவில் வீதி, தட்சனாங்குளம் வீதி என்பவற்றில் இவ்வாறு மின்குமிழ்கள் பொருத்தப்பட்டது.