3 அரிய சிற்பங்களை இந்தியாவிடம் திருப்பியளித்த அமெரிக்கா!!

581

Indiaஇந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, மூன்று அரிய சிலைகளை அமெரிக்கா திருப்பியளித்துள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கைது விவகாரத்தில் ஒரு மாதமாக முடங்கியுள்ள இந்திய – அமெரிக்க உறவை புதுப்பிக்கும் வகையில் இந்த சிற்பங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நியூயோர்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இவ்விழாவில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் விஷ்ணுலட்சுமி சிலை, மணல் கல்லில் உருவாக்கப்பட்ட சிவபார்வதி சிலை, கருங்கல்லில் வடிக்கப்பட்ட புத்தர் சிலை ஆகியவற்றை இந்திய துணை தூதர் தியானேஷ்வர் முலாயிடம் ஒப்படைத்தனர்.