உங்கள் சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் : ஈரானில் இருந்து டிரம்ப் குடும்பத்திற்கு கொ லை மி ரட்டல்!!டிரம்ப் குடும்பத்திற்கு


ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானியின் ப டுகொ லையை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பலர் இன்ஸ்டாகிராம் வழியாக டிரம்ப் குடும்பத்தாருக்கு கொ லை மி ரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த சம்பவம் அமெரிக்க ஜனாதிபதியின் மகளும் அவரது சிறப்பு ஆலோசகருமான இவான்கா டிரம்பை பீ தியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.


இவான்கா மட்டுமின்றி டிரம்பின் மனைவியும் நாட்டின் முதன்மை குடிமகளுமான மெலனியா டிரம்பின் சமூக வலைதள பக்கத்திலும் தொடர்ந்து கொ லை மி ரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.


ஈரானிய முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்கா ப டுகொ லை செய்த பின்னரே, டிரம்ப் குடும்பத்தார் மீது ஈரானிய மக்கள் கொ லை மி ரட்டல் விடுத்து வருகின்றனர். ஈரானியர் ஒருவர், இவான்கா அவரது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, உங்கள் சவப்பெட்டிகளை இருவரும் தயார் செய்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவர், ஈரானிய தேசியக் கொடியின் கீழே, அமெரிக்க ரா ணுவ த ளங்களை ஒவ்வொன்றாக த கர்ப்போம், உங்கள் நாட்டுக்குள்ளும் பு குந்து ப திலடி தருவோம் என பதிவிட்டுள்ளார்.

இவான்கா அவரது தந்தை டிரம்புடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஈரானியர் ஒருவர், இனி உங்களுக்கு அ ழுகையின் காலந்தான், தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை சேகரித்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இவான்கா மற்றும் மெலனியா தொடர்பில் பதிவிட்டுள்ள பல பதிவுகளும் பேர்சிய மொழியில் அமைந்துள்ளது. இதில் அனைவருமே குவாசிம் சுலைமானியை பெருமையாக பேசியுள்ளனர். தற்போது இச்சம்பவம் டிரம்ப் குடும்பத்தாரை பீ தியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.