முல்லைத்தீவில் கடற்படை வாகனம் மோதி குடும்பஸ்தர் ப லி!!

621

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப லியாகியுள்ளார். முல்லைத்தீவு – மல்லாவி, பிரதான வீதி வட்டுவாகல் பாலத்துக்கு அருகிலுள்ள வளைவில் இன்றையதினம் காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளுடன் கடற்படையினரின் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வரும் மல்லாவி, துனுக்காய், ஒட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அமிர்தலிங்கம் ஜீவன் என்பவர் ப லியாகியுள்ளார்.

அத்துடன், அவரது மனைவியான வினுஜா படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.