
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பிரிஸ்பேனில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது.
முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் எடுத்து திணறியது. அதன் பின் மோர்கன் அதிரடியாக விளையாடி சதம் அடித்து சரிவில் இருந்து மீட்டார்.
அவரது சதத்தில் 4 பவுண்டரி, 6 சிக்சர் அடங்கும். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்கள் எடுத்தது. மோர்கன் 106 ஓட்டத்திலும், பட்லர் 49 ஓட்டத்திலும் ஆட்டம் இழந்தனர்.
இதனைத் தொடர்ந்து 301 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 301 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.





