வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் மாபெரும் சிரமதானம்!!

739

மாபெரும் சிரமதானம்

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் மாபெரும் சிரமதான பணி நேற்று (10.01.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.

எமது பாடசாலையை அழகான பாடசாலையாக மாற்றுவோம் எனும் கருப்பொருளுக்கமைய பாடசாலையின் அதிபர் பொன்.சிவநாதன் தலைமையில் இடம்பெற்ற சிரமதானப் பணியில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட குப்பைகள் நகரசபையின் உதவியுடன் அகற்றப்பட்டதுடன் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு அதனை இல்லாதொழிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.