விரைவில் திருமண பந்தத்தில் இணைகிறார் ரெய்னா!!

579

Rainaஇந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

27 வயதான சுரேஷ் ரெய்னா. ஐசிசி சார்பில் நடத்தப்படும் மூன்று விதமான சர்வதேச போட்டிகளிலும் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் இவர் தான். இவர் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

இதுகுறித்து ரெய்னா கூறுகையில், எனது வீட்டில் அதிக நெருக்கடி கொடுப்பதால் எப்படியும் இந்த ஆண்டுக்குள் திருமண பந்தத்தில் இணைந்து விடுவேன் என நினைக்கிறேன்.

இன்னும் 6–7 மாதங்களில் திருமண திகதி தெரிந்துவிடும், பொருத்தமான ஜோடி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம். இருவரும் புரிந்து கொண்டால் மட்டுமே, வாழ்க்கை கடைசிவரை அமைதியாக இருக்கும்.

கடந்த 10–12 ஆண்டுகளாக என் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய தருணங்கள், நிகழ்ச்சிகளை குடும்பத்துடன் கொண்டாட தவறிவிட்டேன் என்றும் இந்த ஆண்டாவது நிச்சயம் குடும்பத்துடன் கூடுதல் நேரத்தை செலவிட முயற்சிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.