ஒபாமாவுக்கு மிரட்டல் விடுத்த பெண்!!

421

Obamaஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொலை செய்யப் போவதாக டெனீஸ் ஓநீல் என்ற பெண் மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி கைது செய்யப்பட்டார்.

வெறும் மிரட்டலோடு நின்றுவிடாமல் அதனை நிறைவேற்றும் எண்ணத்திலும் செயல்பட்டதாக ஓநீல் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஐந்து வருடம் வரை சிறைத்தண்டனையும் 2,50,000 டொலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது.

ஏற்கனவே 2008ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷுக்கும், 2009ம் ஆண்டு தனது மேலதிகாரிக்கும் ஓநீல் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.