வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரின் படைப்புக்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

325


மனோகரன் இந்துநேசன்


நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.ஊடகங்களின் பார்வையில் பட்டுவிடும் திறமைசாலிகள் உலகின் வெளிசத்துக்கு வந்து, அடையாளங்களையும் பெற்றுவிடுகின்றனர்.


அந்தவகையில் நமது பார்வையில் சிக்கிய வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன் இந்துநேசன் எனும் கலைஞரின் திறமையினை வெளிக்கொணர்வதில் வவுனியா நெற் இணையத்தளம் மகிழ்ச்சியடைகிறது.


ஒரு புகைப்படத்தினைப் பார்த்தால் அதனை அப்படியே போட்டோபிரதி எடுப்பது போல அச்சுஅசலாக வரைவதுதான் இந்துநேசனின் அசாத்திய திறமை.

ஓவியங்கள் வரைவது, 3D ஓவியங்கள் வரைவது, வர்ணம் தீட்டுவது, உட்பட கலைத்துறையில் பல்வேறு திறமைகளை கொண்ட இந்துநேசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதுடன் தற்போது வவுனியா நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரியில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.

இவரின் திறமை வெளிச்சத்துக்கு வந்து இவரது கலைப்பயணம் மெம்மேலும் சிறப்படைய வவுனியா நெற் வாழ்த்துகிறது. இவரின் கைவண்ணத்தால் உருவாகிய சில படைப்புக்களை உங்கள் பார்வைக்காக.

இவரை வாழ்த்த விரும்பினால் இந்த இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுங்கள் 0775147890.