வவுனியா கூமாங்குளம் பேரூந்து தரிப்பிடத்தினை அழகாக மாற்றிய இளைஞர்கள்!!

118


கூமாங்குளம் பேரூந்து தரிப்பிடத்தினை..


வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் காணப்பட்ட பேரூந்து தரிப்பிடம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அவலட்சணமான முறையில் பயணிகளின் பாவணைக்கு ஒவ்வாத வகையில் காணப்பட்டது.இதனையடுத்து கூமாங்குளம் பகுதியினை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பேரூந்து தரிப்பிடம் அழகுற மாற்றப்பட்டுள்ளது.


இளைஞர்களின் நேரத்தை பயனுள்ள விதமாக மாற்றுவதுடன் அவர்களின் சிந்தனைகளை சித்திரமாக்கும் திட்டம் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.


சுவரோவியங்களில் திருவள்ளுவர், தமிழரின் பாரம்பரிய கலை, தைப்பொங்கல் திருநாள் போன்றவற்றை சித்தரித்து ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நெளுக்குளம் பகுதியில் பாவனைக்கு ஒவ்வாத வகையில் காணப்பட்ட பேருந்து தரிப்பிடத்தினை வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நெளுக்குளம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அழகுற மாற்றி அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.