அஸர்பைஜானில் உ யிரிழந்த மா ணவிகள் : பெற்றோரிடம் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ள விடயம்!!உ யிரிழந்த மா ணவிகள்


அஸர்பைஜான் நாட்டில் உ யிரிழந்த இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகளின் ச டலங்களை இலங்கைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளுக்காக 15 லட்சம் ரூபாயை வழங்க தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.மூன்று மாணவிகளின் ச டலங்களை இலங்கைக்கு கொண்டு தேவையான பணத்தை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சு மாணவிகளின் பெற்றோரிடம் அறிவித்துள்ளது.


இந்த பிள்ளைகளின் பெற்றோர் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


அஸர்பைஜான் நாட்டின் பாகு நகரில் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்தது வந்த இலங்கை மாணவிகள் தங்கியிருந்த தொடர்மாடி வீட்டில் ஏற்பட்ட தீயி னால் ப ரவிய வாயு காரணமாக மூச்சு தி ணறல் ஏற்பட்டு மா ணவிகள் உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.