வீசா ஒழுங்குக்கு அப்பால் செயற்பட்டால் நாடு கடத்தல் : இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை!!

381

Australia Flagஇலங்கைக்கு செல்லும் அவுஸ்திரேலியர்கள் அங்கு வீசா ஒழுங்குகளுக்கு அப்பால் செயற்படக்கூடாது என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

அவ்வாறான நடவடிக்கையின் போது அவுஸ்திரேலியர்கள் நாடு கடத்தப்படும் நிலை ஏற்படும் என்றும் அந்த நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அத்துடன் அந்த அறிக்கையில் இலங்கையின் பல பகுதிகளிலும் டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளமையையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் தமது பதிவுகளை அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சுடன் பகிர்ந்துக்கொள்ளுமாறும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது.